பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3234/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

    1. 3234/2023

      கௌரவ நிரோஷன் பெரேரா,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை மத்திய வங்கியின் "நாணய வழங்கல் நிலவறையில்" வைக்கப்பட்டிருந்த ரூ. 5 மில்லியன் காணாமல் போயுள்ளதா என்பதையும்;

      (ii) அதற்குப் பொறுப்புக் கூறவேண்டிய உத்தியோகத்தர்களை அடையாளங் காண்பதற்காக புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iii) மேற்படி புலனாய்வு நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) நாணய வழங்கல் நிலவறையில் ​பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) மேற்படி பாதுகாப்பு கமராக் கட்டமைப்பில் பதிவாகியுள்ள காட்சிகள் தொடர்பில் புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iii) இலங்கை மத்திய வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-20

கேட்டவர்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-28

பதில் அளித்தார்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks