E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3266/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எம். எஸ். தௌபீக், பா.உ.

    1. 3266/2023

      கௌரவ எம்.எஸ். தௌபீக்,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)     (i)     மாதாந்த அவைக் கூட்டங்கள் நடாத்தப்படுகின்ற மண்டபங்களில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கான சமகால உரைபெயர்ப்பு வசதிகள் இல்லாத தென் மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் யாவை என்பதையும்;

      (ii) தமிழ் மொழியைப் பயன்படுத்தும் மக்கள் கணிசமான எண்ணிக்கையானோர் வாழும் தென் மாகாணத்தின் உள்ளூராட்சி மன்ற அதிகாரப் பிரதேசங்கள் இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iii) ஆமெனில், மேற்படி உள்ளூராட்சி மன்ற அதிகாரப் பிரதேசங்கள் யாவை என்பதையும்;

      (iv) நிருவாக மொழியாக சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் பயன்படுத்தப்பட வேண்டுமென பிரகடனம் செய்யப்பட்டுள்ள அதிகாரப் பிரதேசங்கள் உள்ளடங்கும் தென் மாகாணத்தில், உள்ளூராட்சி மன்றங்களின் மாதாந்த அவைக் கூட்டங்கள் நடாத்தப்படுகின்ற மண்டபங்களுக்கு சமகால உரைபெயர்ப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-05-25

கேட்டவர்

கௌரவ எம். எஸ். தௌபீக், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks