E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3276/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ லலித் எல்லாவல, பா.உ.

    1. 3276/2023

      கௌரவ லலித் எல்லாவல,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்காக இன்றளவில் சகல காணிகளும் சுவீகரிக்கப்பட்டுள்ளன என்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அக்காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு செலுத்தும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iii) செலுத்தப்பட்ட மொத்த நட்டஈட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;

      (iv) இதுவரை நட்டஈடு செலுத்தப்படவில்லை எனின், நட்டஈடு செலுத்தப்படும் திகதி யாது என்பதையும்;

      (v) சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நட்டஈட்டுத் தொகையை கணிப்பிடும்போது அரசாங்கத்தின் மதிப்பீட்டுப் பெறுமதியானது அக்காணிகளின் தற்போதைய சந்தைப் பெறுமதியை விட பாரியளவில் குறைந்திருப்பதன் காரணமாக மேற்படி காணி உரிமையாளர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதால் அக்காணிகளை தற்போதைய சந்தைப் பெறுமதிக்கு ஏற்ப மீண்டும் மதிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      (vi) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) குறித்த காணியின் ஒரு பகுதி மாத்திரம் சுவீகரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் எஞ்சிய காணித் துண்டின் எல்லைகளை அடையாளமிட்டு காணி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;

      (ii) ஆமெனில், அவ்வேலைத்திட்டம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-06-08

கேட்டவர்

கௌரவ லலித் எல்லாவல, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-06-08

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks