பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3318/2023
கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் தற்பொழுது அதிகளவில் வாகன விபத்துகள் இடம்பெற்று வருகின்றன என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) கொழும்பு-கண்டி பிரதான வீதியின் இந்திகஹமுல சந்திக்கு அருகாமையில் கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வாகன விபத்துகளின் எண்ணிக்கை மற்றும் அவ்விபத்துகளின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்பன ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் தனித்தனியே யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) வேபொட பகுதியிலிருந்து கொழும்பு–கண்டி பிரதான வீதியை அடைவதற்கான நுழைவு வீதியொன்று இருக்கின்றது என்பதையும்;
(ii) வேபொட வீதியிலிருந்து பிரதான வீதிக்குப் பிரவேசிக்கும் வாகனங்கள் கண்டி அல்லது கொழும்பு ஆகிய திசைகளை நோக்கிப் பயணிக்கின்றன என்பதையும்;
(iii) அவ்விடத்தில் உள்ள பாதசாரிகள் கடவையில் அதிகளவான வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன என்பதையும்;
(iv) மேற்படி பாதசாரி கடவையும் நுழைவு வீதியும் ஒரே இடத்தில் அமைந்துள்ளமையே இதற்கான காரணம் என்பதையும்;
(v) பல வருடங்களாக இது தொடர்பில் விழிப்புணர்வூட்டப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(இ) மேற்குறிப்பிட்ட இடத்தில் இடம்பெறும் வாகன விபத்துகளைத் தவிர்த்து, உயிர்ச் சேதங்களையும் சொத்துக்களுக்கான சேதங்களையும் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-06-23
கேட்டவர்
கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks