பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3321/2023
கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய, — கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு, —
(அ) (i) இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிலும் அங்கீகரிக்கப் பட்டுள்ள கல்விசார் பதவியணி மற்றும் கல்விசாராப் பதவியணிகளை வெவ்வேறாகவும்;
(ii) மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினதும் வெவ்வேறு பிரிவுகளிலுள்ள நிரந்தர பணியாற்றொகுதிகளின் விபரங்களை வெவ்வேறாகவும்;
(iii) அரச பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள பதவியணியில் தற்போது நிலவும் வெற்றிடங்களை வெவ்வேறாகவும்;
(iv) கொழும்பு பல்லைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், ருகுனு பல்கலைக்கழகம், ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நிலவும் வெற்றிடங்களை பீடங்கள் அடிப்படையில் வெவ்வேறாகவும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேற்படி அரச பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிலும்,
(i) தற்போது வரை பட்டபின்படிப்பு விடுமுறையில் மற்றும் / அல்லது ஆய்வு விடுமுறையில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை;
(ii) பதவியை வறிதாக்கிச் சென்ற ஊழியர்களின் எண்ணிக்கை;
(iii) 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இராஜினாமாச் செய்த ஊழியர்களின் எண்ணிக்கை;
(iv) தற்போதுள்ள ஒப்பந்த அடிப்படையிலான, வருகைதரும் அடிப்படையிலான அல்லது தற்காலிக அடிப்படையிலான கல்விசார் பணியாற்றொகுதியின் எண்ணிக்கை;
வெவ்வேறாக யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-07-21
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) (செல்வி) ஹரினி அமரசூரிய, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks