E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3336/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார், பா.உ.

    1. 3336/2023
      கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழுள்ள அரசாங்க வைத்தியசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      (ii) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையினதும் பெயர் மற்றும் அது அமைந்துள்ள மாவட்டம் தனித்தனியே யாதென்பதையும்;
      (iii) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையிலும் இருக்க வேண்டிய மற்றும் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களினதும் மருத்துவ நிபுணர்களினதும் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;
      (iv) மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் நிலவும் மருத்துவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) மேலதிக கல்விக்காக வெளிநாடு சென்ற மருத்துவர்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்பாமல் உள்ளனரா என்பதையும்;
      (ii) ஆமெனில், அம்மருத்துவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      (iii) மேலதிக கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள மருத்துவர்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்பாமல் இருப்பதனைத் தடுப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
      (iv) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-08-22

கேட்டவர்

கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-08-22

பதில் அளித்தார்

கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks