E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3355/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

    1. 3355/2023

      கௌரவ ஜயந்த சமரவீர,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தொல்லியல் பிரதேசமாக வர்த்தமானப் பத்திரிகையின் மூலம் பிரகடனப்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களத்தால் இன்றளவில் அடையாளம் காணப்பட்டுள்ள தொல்லியல் பிரதேசங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு தொல்லியல் பிரதேசத்தின் பெயர், அமைந்துள்ள மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேச செயலகப் பிரிவு என்பன வெவ்வேறாக யாவையென்பதையும்;

      (iii) இன்றளவில் வர்த்தமானப் பத்திரிகையின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தொல்லியல் பிதேசங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iv) மேற்படி ஒவ்வொரு தொல்லியல் பிரதேசத்தின் பெயர், அமைந்துள்ள மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேச செயலகப் பிரிவு என்பன வெவ்வேறாக யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) தொல்லியல் பிரதேசமாக இதுவரை வர்த்தமானப் பத்திரிகையின் மூலம் பிரகடனப்படுத்தப்படாத தொல்லியல் பிரதேசங்களை வர்த்தமானப் பத்திரிகையின் மூலம் பிரகடனப்படுத்துவதற்கு காலச்சட்டகமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி காலச்சட்டகம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-06

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-28

பதில் அளித்தார்

கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks