பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3358/2023
கௌரவ ஜயந்த சமரவீர,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இன்றளவில் சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய மேற்கத்தேய மருந்து வகைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அவற்றின் பொதுப் பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு மருந்து வகையும் உற்பத்தி செய்யப்படுகின்ற நாடு, உற்பத்தி செய்கின்ற கம்பனி/நிறுவனம் மற்றும் இலங்கைக்கு இறக்குமதி செய்கின்ற கம்பனி/நிறுவனம் வெவ்வேறாக யாவை என்பதையும்;
(iv) அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படுகின்ற மருந்து வகைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பொதுப் பெயர்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
(v) மேற்படி (iv)இல் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையானது மொத்த அத்தியாவசிய மருந்து வகைகளின் எண்ணிக்கையில் எத்தனை சதவீதம் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அண்மைக்காலத்தில் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பின் சதவீதத்தை விட அதிக சதவீதத்தில் மருந்துகளின் விலைகள் அதிகரித்தன என்பதனை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(iii) மருந்துகளின் விலை அதிகரிப்பினைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-09-21
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
அமைச்சு
சுகாதாரம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks