பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2372/ ’12
கௌரவ தயாசிறி ஜயசேகர,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொழும்பு 07, ரொரின்ரனில் 187ஆம் தோட்டத்தில் குடிசை வீட்டுரிமையாளர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) இவர்களது வீடுகளுக்காக நிரந்தர உரிமை அல்லது உரிமப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) ஆமெனில், இவர்கள் மேற்படி உரிமையை அனுபவித்து வருகின்ற கால எல்லை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி வீடுகளை உடைத்து அகற்றுவதற்காக அரசாங்கம் தீர்மானமொன்றை எடுத்துள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், இவர்களுக்கு அதே இடத்தில் அல்லது வேறு ஒரு இடத்தில் புதிய வீடுகள் பெற்றுக்கொடுகப்படுமா என்பதையும்;
(iii) வேரொரு இடத்தில் புதிய வீடுகள் பெற்றுக்கொடுக்கப்படுமெனில் அந்த இடம் யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) புதிய வீடமைப்புத் தொகுதியொன்றை நிர்மாணித்து அந்த வீடுகளை பணம் அறவிடாமல் 187 ஆம் தோட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருந்ததா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி பிரேரணை இதுவரை நடைமுறைப் படுத்தப்படாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-12-03
கேட்டவர்
கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2012-12-03
பதில் அளித்தார்
கௌரவ விமல் வீரவங்ச, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks