பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3505/2023
கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2023 ஆம் ஆண்டிற்கான உயர்கல்விக்கான மொத்த வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்குறிப்பிட்ட மொத்த ஒதுக்கீட்டில் இருந்து மூலதனச் செலவினத்திற்காகவும் மீண்டெழும் செலவினத்திற்காகவும் ஒதுக்கப்பட்ட நிதிகளின் சதவிகிதத்தினை வெவ்வேறாகவும்;
(iii) மேற்குறிப்பிட்ட ஒதுக்கீட்டில் இருந்து தற்போது மூலதனச் செலவினத்திற்காகவும் மீண்டெழும் செலவினத்திற்காகவும் விடுவிக்கப்பட்டுள்ள நிதிகளை வெவ்வேறாகவும்;
(iv) 2019 முதல் 2023 வரையான காலப்பகுதியின் போது அரச பல்கலைக்கழகங்களில் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட நிதிகளை வெவ்வேறாகவும்;
(v) 2021 முதல் 2023 வரையான காலப்பகுதிக்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகம், இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம், இலங்கை வாழ்க்கை தொழில் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம், எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவனம் - கட்டுநாயக்க, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பெளத்த, பாளி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட நிதிகளை வெவ்வேறாகவும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-09-06
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks