பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3514/2023
கௌரவ அசங்க நவரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குருநாகல் மாவட்டத்தில் அரச பாடசாலைகளில் தற்போது சேவையாற்றி வருகின்ற அதிபர்களின் எண்ணிக்கை யாது;
(ii) மேற்படி ஒவ்வொரு அதிபரினதும் பெயர், கடமை முகவரி, தனிப்பட்ட முகவரி, தொலைபேசி இலக்கம், அதிபர் பதவிக்கு நியமனம் பெற்ற திகதி, தற்போது வகிக்கும் தரம் மற்றும் ஓய்வுபெறவுள்ள திகதி என்பன வெவ்வேறாக யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அரச பாடசாலையொன்றில் அதிபர் பதவியை வகிக்கக்கூடிய காலஎல்லை தொடர்பாக நிரல் அமைச்சினால் அல்லது வடமேல் மாகாண கல்வி அமைச்சினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், மேற்படி தீர்மானம் யாது;
(iii) அதிபர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் 2023.01.01 ஆம் திகதியின் பின்னர் வடமேல் மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள கொள்கைசார் தீர்மானங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-09-06
கேட்டவர்
கௌரவ அசங்க நவரத்ன, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-11-07
பதில் அளித்தார்
கௌரவ அ. அரவிந்த் குமார், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks