E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3589/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

    1. 3589/2023

      கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;

      (iii) அவ்வமைப்புகளை தடைசெய்வதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் யாவையென்பதையும்;

      (iv) அவ்வமைப்புகளுள் இன்றளவில் தடை நீக்கப்பட்டுள்ள அமைப்புகள் யாவையென்பதையும்;

      (v) தடை நீக்கப்படுவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் யாவையென்பதையும்;

      (vi) உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அமைப்புகளுக்கும் நபர்களுக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தனித்தனியே யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-27

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2024-01-11

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks