பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3647/2023
கௌரவ வடிவேல் சுரேஷ்,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முத்தியங்கனை ரஜமஹா விகாரை, மஹியங்கனை ரஜமஹா விகாரை, மற்றும் கதிர்காமம் கொயில் என்பவை ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளன என்பதையும்;
(ii) சமய மற்றும் கலாசார விழுமியங்களுடன் கூடிய சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் பதுளை மாவட்டம் உட்பட ஊவா மாகாணத்தில் பல ரஜமஹா விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ரஜமஹா விகாரைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) தொல்பொருள் சட்டங்களுக்கு அமைவாக மேற்படி ரஜமஹா விகாரைகள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றனவா என்பதையும்;
(iv) பசறை, போகொடை, தோவ, முத்தியங்கனை மற்றும் மஹியங்கனை ரஜமஹா விகாரைகளையும் ஏனைய ரஜமஹா விகாரைகளையும் பேணிப் பாதுகாப்பதற்காக இது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) பௌத்த மக்களுடைய சமய கலாசார பின்னணிக்கமைவாகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மரபுரிமையைப் பாதுகாக்கும் வகையிலும் மேற்படி பேணல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மரபுரிமைகளை எதிர்காலச் சந்ததியினரின் நலன் கருதி பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-10-20
கேட்டவர்
கௌரவ வடிவேல் சுரேஷ், பா.உ.
அமைச்சு
புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks