பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3648/2023
கௌரவ வடிவேல் சுரேஷ்,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இந்துக்களின் சமய அலுவல்களின் நிமித்தம் பதுளை மாவட்டத்தில் தோட்டங்களையும் நகரங்களையும் அண்டியதாக கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதையும்;
(ii) தோட்டத் தொழிலாளர்களின் மாதச் சம்பளத்திலிருந்து அறவிடப்படுகின்ற சந்தா மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் வழங்கப்படுகின்ற நிதி ஏற்பாடுகளைக் கொண்டு தோட்டப்புற கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதையும்;
(iii) நிதி நெருக்கடிகள் காரணமாக தோட்டப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள கோவில்களில் பெரும்பாலானவை பகுதியளவிலேயே அமைக்கப்பட்டுள்ளன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) பதுளை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவில்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) தோட்டப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள கோவில்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iii) அவ்வாறாயின், அத்தகைய கோவில்களை அபிவிருத்தி செய்வதற்கு/ பாதுகாப்பதற்கு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-11-29
கேட்டவர்
கௌரவ வடிவேல் சுரேஷ், பா.உ.
அமைச்சு
புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks