E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3719/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, பா.உ.

    1. 3719/2023

      கௌரவ பீ.வை.ஜீ. ரத்னசேக்கர,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இன்றளவில் இலங்கையின் எழுத்தறிவு விகிதம் யாதென்பதையும்;

      (ii) வருடாந்தம் பாடசாலையை விட்டு இடை விலகும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தரத்திற்கமைவாகவும் தனித்தனியே எத்தனையென்பதையும்;

      (iii) பாடசாலையை விட்டு இடை விலகும் மாணவர்களுக்காக உள்ள தொழிற்பயிற்சிக் கற்கை நெறிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iv) 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மேற்படி தொழிற்பயிற்சிக் கற்கை நெறிகளின் கீழ் பயிற்சி பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்திற்கமைவாகவும் தனித்தனியே எத்தனையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இன்றளவில் இலங்கையிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அவற்றுள் தற்போது செயற்பாட்டிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iii) இன்றளவில் தொழில்நுட்பக் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-29

கேட்டவர்

கௌரவ பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks