பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2436/ ’12
கெளரவ ஆர். யோகராஜன்,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு (டீ.ஐ.ஜீ) அண்மையில் வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் தொடர்பாக,
(i) விண்ணப்பதாரிகளின் பெயர்கள்;
(ii) பதவி உயர்வு வழங்கப்பட்ட அலுவலர்களின் பெயர்கள்
போன்ற விபரங்களை அவர் கூறுவாரா?
(ஆ) ஒவ்வொரு பரீட்சார்த்திகளுக்கும் சேவைமூப்புநிலை மற்றும் தனிப்பட்ட சாதனை என்பவற்றின் அடிப்படையில் 70 புள்ளிகளும் மற்றும் நேர்முகப் பரீட்சையில் 30 புள்ளிகளும் வழங்கப்பட்டனவா என்பதை அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?
(இ) (i) சேவைமூப்புநிலை, தனிப்பட்ட சாதனைகள் மற்றும் அவர்களின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பரீட்சார்த்தியும் பெற்ற புள்ளிகளையும்;
(ii) நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் ஒவ்வொரு பரீட்சார்த்தியும் பெற்ற நிலை மற்றும் மேலே (இ)(i) இன் அடிப்படையில் பெற்ற புள்ளிகள் ஆகியவற்றை
தனித்தனியாக இச்சபைக்கு அவர் அறிவிப்பாரா?
(ஈ) (i) நேர்முகப்பரீட்சைச் சபையில் இருந்த உறுப்பினர்களின் பெயர்களையும்;
(ii) நேர்முகப் பரீட்சைச் சபையை நியமித்த அதிகாரியையும்
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-06-22
கேட்டவர்
கௌரவ கெளரவ ஆர். யோகராஜன், பா.உ.,, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks