E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2494/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 2494/ ’12

      கெளரவ தயாசிறி ஜயசேகர,—  வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     பாடகி நந்தா மாலினி உள்ளிட்ட குழுவினர் 2012.02.01 ஆம் திகதி குவைட் நாட்டிற்கு விஜயம் செய்த போது அந்நாட்டின் பாதுகாப்புப் பிரிவின் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென்பதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், இவ்வாறான சோதனைக்கு உட்படுத்தப்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்;

      (iii) மேற்படி சோதனையின்போது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருளோ அல்லது தடையமோ இவரிடமிருந்து அல்லது அக்குழுவினரிடமிருந்து கண்டறியப்பட்டதா என்பதையும்;

      (iv) மேற்படி சம்பவம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணையொன்றை மேற்கொண்டதா என்பதையும்;

      (v) இது சம்பந்தமாக இராஜதந்திர மட்டத்தில் ஏதேனும் வினவுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (vi) மேற்படி சோதனையிடல்கள் போலித் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அத்தகைய போலித் தகவல்களை வழங்கிய தரப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரா என்பதையும்;

      (vii) ஆமெனில், இவர்களின் விபரங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) திருமதி நந்தா மாலினிக்கு நேரிட்ட அசெளகரியம் சம்பந்தமாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-19

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-03-19

பதில் அளித்தார்

கௌரவ ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks