E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2497/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 2497/ ’12

      கௌரவ தயாசிறி ஜயசேகர,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    அரிசி மாவைப் பயன்படுத்தி பான், பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உட்பத்திகளை பிரபல்யமடையச் செய்வதற்காக 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை அரசாங்கம் ஒதுக்கிய பணத் தொகை வருட வாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) மேற்படி உற்பத்திகளைச் செய்வதற்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ள இயந்திர சாதனங்கள் யாவையென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு இயந்திர சாதனத்தினதும் பெறுமதி தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

      (iii) இவை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நபர்கள் அல்லது நிறுவனங்கள் யாவையென்பதையும்;

      (iv) தற்போது மேற்படி இயந்திர சாதனங்களின் நிலைமை எவ்வாறுள்ளது என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) அரிசி மா சார்ந்த பேக்கரி உற்பத்திகள் தற்போது பெற்றுள்ள முன்னேற்றம் யாதென்பதையும்;

      (ii) கோதுமை மா பேக்கரி உற்பத்திகளுக்குப் பதிலாக அரிசி மா பேக்கரி உற்பத்திகளின் பாவனையை நாட்டில் முழுமையாக ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-20

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-05-21

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks