E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2545/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

    1.  2545/ ’12

      கௌரவ அநுர திசாநாயக்க,— தனியார் போக்குவரத்துச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)      தெற்கு கடுகதி நெடுஞ்சாலையில் காலியிருந்து கொழும்பு வரையான பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக உரிமப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள தனியார் பேருந்து வண்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (ii) மேற்படி உரிமப்பத்திரங்கள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதையும்;

      (iii) உரிமப்பத்திரமொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக வருடாந்தம் செலுத்த வேண்டிய பணத் தொகை எவ்வளவு என்பதையும்;

      (iv) மேற்படி பேருந்து வண்டிகளின் ஓட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஓட்ட நேர அட்டவணை யாது என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2012-11-16

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

தனியார் போக்குவரத்துச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2012-11-16

பதில் அளித்தார்

கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks