E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2566/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2566/ ’12

      கௌரவ சஜித் பிரேமதாச,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    பெந்தர ஆற்றின் இடது கரை மற்றும் வலது கரைக் கருத்திட்டங்களுக்குச் சொந்தமான பெருமளவிலான வயற்காணிகள் பாழடைந்துள்ளதென்பதை அவர் அறிவாரா?

      (ஆ)    (i)     “பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்ற வேலைத்திட்டத்தின் கீழ் மேற்படி வயற்காணிகளில் மீண்டும் பயிரிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி மீள் பயிரிடும் வேலைத் திட்டத்தின் பின்னர் மேற்படி வயற்காணிகளில் விளைச்சல் அதிகரித்துள்ளதா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) பெந்தர ஆற்றின் ஊடாக பெருக்கெடுக்கும் கடல் நீர் காரணமாக மேற்படி வயற்காணிகள் அழிந்து வருவதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) கடல் நீர் வயற்காணிகளுக்கு பெருக்கெடுப்பதைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-18

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-02-05

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks