பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2596/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2596/ ’12

      கௌரவ சஜித் பிரேமதாச,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      2005 – 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக தனித்தனியே எவ்வளவு என்பதையும்;

      (ii) மேற்படி தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ள பெண்களின் எண்ணிக்கை, மேற்படி ஒவ்வொரு ஆண்டிலும் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையின் சதவீதமாக தனித்தனியே எவ்வளவு என்பதையும்;

      (iii) மேற்படி பெண்கள் எவ்வாறான தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளனர் என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்காக சென்றுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;

      (ii) எதிர்காலத்தில் மேற்படி வேலைத்திட்டத்தை மென்மேலும் முறைசார்ந்ததாகவும் பலம்மிக்கதாகவும் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      (iii) ஆமெனில், அதனை மேற்கொள்ளும் முறை யாது என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-08

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-05-07

பதில் அளித்தார்

கௌரவ டிலான் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks