E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2631/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.

    1. 2631/ ’12

       

      கெளரவ லக்ஷ்மன் கிரிஎல்ல,—  வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)      2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முன்னிலையில், பதினேழாவது அரசியலமைப்புத் திருத்தத்தை மேலும் பலப்படுத்துவதாகவும் பதினேழாவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் தடைகளை நீக்குவதாகவும் அரசாங்கத்தினால் வாக்குறுதி அளிக்கப்பட்டது என்பதையும்;

      (ii) மீண்டும் 2007 சர்வதேச பருவகால மீளாய்வுக் (UPR) கூட்டத்திலும் பதினேழாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது என்பதையும்;

      (iii) பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக பதினேழாவது அரசியலமைப்புத் திருத்தம் இரத்துச் செய்யப்பட்டதன் மூலம் மேற்படி வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன  என்பதையும்;

      (iv) மேற்படி வாக்குறுதிகள் மீறப்பட்டமையினால் அரசாங்கத்தின் நம்பகத்தன்மை சர்வதேச ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதையும்;

      (v) இதனால் எமது நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது  என்பதையும்

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழுவின் விதப்புரைகள் மற்றும் இலங்கை பற்றிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரேரணைகள் மூலம் சுயாதீன ஆணைக் குழுக்களின் தேவைப்பாடு விதந்துரைக்கப்பட்டுள்ளதால், பதினேழாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி சுயாதீன ஆணைக்குழுக்களை தாபிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-07-20

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks