பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4/2024
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் தற்பொழுதுள்ள அமைச்சுக்கள், திணைக்களங்கள், நியதிச் சட்ட சபைகள் உள்ளிட்ட மொத்த அரச நிறுவனங்களின் எண்ணிக்கை எத்தனை;
(ii) மேற்படி ஒவ்வொரு நிறுவனத்திலும் பாதுகாப்புச் சேவைகளை வழங்குகின்ற பாதுகாப்புக் கம்பனிகளின் பெயர்கள் யாவை;
(iii) அவற்றுள் அரச கம்பனிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை;
(iv) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் மேற்படி ஒவ்வொரு அரச நிறுவனத்தினதும் பாதுகாப்புச் சேவைக்காக தனியார் பாதுகாப்புக் கம்பனிகளுக்கு செலுத்தப்பட்ட பணத்தொகை ஒவ்வொரு கம்பனியின் அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பை வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களைப் பெறுகின்றபோது மோசடி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது என்பதை அவர் அறிவாரா;
(ii) ஆமெனில், அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்புச் சேவை வழங்கும் செயற்பாட்டை அரசிற்குரிய பாதுகாப்புக் கம்பனிகளுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-01-10
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2025-03-20
பதில் அளித்தார்
கௌரவ ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks