E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2637/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 2637/ ’12

      கெளரவ தயாசிறி ஜயசேகர,—  அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    சுனாமியொன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் தகவல்களைப் பெறுவதற்காக இலங்கையை அண்டியுள்ள கடற்பரப்பில் தாபிக்கப்பட்டுள்ள சுனாமி தகவல் அறியும் கோபுரங்கள்,

                 (i)     எத்தனை என்பதையும், அவற்றை தாபிப்பதற்கு செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவு என்பதையும்;

      (ii) தாபிக்கப்பட்ட திகதிகள், அவற்றினூடாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் இக்கோபுரங்களினூடாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தகவல்கள் அறிந்த பின்னர் இலங்கைக்கு அத்தகைய சுனாமியினால் தாக்கம் விளைவதற்கு எடுக்கும் நேரம் யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) 2012.04.11ஆம் திகதி அல்லது அதற்கு அண்மியதொரு தினத்தில் சுமாத்திராவில் நிகழ்ந்த சுனாமி நிலை இலங்கைக்கு தாக்கம் விளைவிக்குமென எமது சுனாமி கோபுரங்களிலிருந்து தகவல்கள் பெறப்பட்டதா என்பதையும்;

      (ii) இல்லையெனில், சம்பந்தப்பட்ட சுனாமி நிலை தொடர்பாக மக்களை அறிவூட்டுவதற்கு உரிய தகவல்கள் எவ்வாறு பெறப்பட்டன என்பதையும்;

      (iii) மேற்படி (ஆ)(ii) இற்கு ஏற்ப வேறு விதத்தில் தகவல்கள் பெறப்பட்டதாயின் சுனாமி பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கையில் சுனாமி கோபுரங்கள் தாபிக்கப்பட்டதன் நோக்கம் யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-04-23

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

அனர்த்த முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-04-23

பதில் அளித்தார்

கௌரவ துலீப் விஜேசேக்கர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks