E   |   සි   |  

 திகதி: 2024-12-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0100/ 2024 - கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 100/2024

      கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) நெல் கொள்வனவு தொடர்பில் தற்போது செயற்படுத்தப்படும் நடைமுறை யாதென்பதையும்;

      (ii) இம்முறை அரசாங்கம் கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ள நெல்லின் அளவு எத்தனை மெட்ரிக் தொன் என்பதையும்;

      (iii) மேற்படி நெல் கையிருப்பு களஞ்சியப்படுத்தப்படும் இடங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) நெல் கொள்வனவுக்காக விதிக்கப்பட்டுள்ள ஆகக்குறைந்த விலை ஒவ்வொரு நெல் வகைக்கும் ஏற்ப தனித்தனியாக யாதென்பதையும்;

      (ii) மேற்படி விலையை நடைமுறைப்படுத்தும் கால வரையறை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2024-12-18

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2024-12-18

பதில் அளித்தார்

கௌரவ நாமல் கருணாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks