E   |   සි   |  

 திகதி: 2025-03-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0127/ 2025 - கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 127/2024
      கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் இதுவரையில் அச்சிடப்பட்டுள்ள நாணயத் தாள்கள் மற்றும் வார்க்கப்பட்டுள்ள நாணயக் குற்றிகளின் பெறுமதி இலங்கை ரூபாவில் எவ்வளவு என்பதையும்;
      (ii) மேற்படி நாணயத் தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகள் அச்சிடப்பட்ட சந்தர்ப்பங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
      (iii) அச்சிடப்பட்ட நாணயத் தாள்கள் மற்றும் வார்க்கப்பட்ட நாணயக் குற்றிகளின் வகைகள் மற்றும் அவ் ஒவ்வொரு நாணயத் தாள் மற்றும் நாணயக் குற்றி வகைகளில் அச்சிடப்பட்ட பெறுமதி வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
      (iv) அவ்வாறு அச்சிடப்படுவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      (v) மேற்படி நாணயத் தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகளை அச்சிடுவதற்கான அங்கீகாரம் யாரால் வழங்கப்பட்டது என்பதையும்;
      (vi) மேற்படி நாணயத் தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகள் உபயோகிக்கப்பட்ட நோக்கங்கள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) எதிர்காலத்தில் நாணயத் தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகளை அச்சிட எதிர்பார்க்கப்படுகின்றதா என்பதையும்;
      (ii) ஆமெனில், அந்த நாணயத் தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகளின் பெறுமதி எவ்வளவு என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-21

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-03-21

பதில் அளித்தார்

கௌரவ ஹர்ஷண சூரியப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks