பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
148/2024
கௌரவ அஜித் பி. பெரேரா,— இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) களுத்துறை மாவட்டத்தின், பண்டாரகமவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள களுத்துறை மாவட்ட விளையாட்டுக் கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்ட திகதி யாது;
(ii) அவ் விளையாட்டுக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக செலவு செய்யப்பட்ட பணத்தொகை எவ்வளவு;
(iii) முறையாக பராமரிக்கப்படாமையின் காரணமாக மேற்படி விளையாட்டுக் கட்டிடத் தொகுதி சேதமடைந்துள்ளது என்பதை அறிவாரா;
(iv) அவ் விளையாட்டுக் கட்டிடத் தொகுதியில் உள்ள 400 மீட்டர் ஓட்டப்பாதையை உரிய தரத்திற்கமைய அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
(v) அவ் விளையாட்டுக் கட்டிடத் தொகுதியின் பாதுகாப்பு மதிலுக்கு வெளியிலுள்ள, அதற்குரித்தான காணியில் வாகனங்களை நிறுத்துவதற்காக பொருத்தமான வகையில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அவ் விளையாட்டுக் கட்டிடத் தொகுதி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் அறிவாரா;
(ii) அவ் விளையாட்டுக் கட்டிடத் தொகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தை, கிரிக்கெட் விளையாட்டை விளையாடுவதற்கு உகந்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படாமைக்கான காரணங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-01-21
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2025-01-21
பதில் அளித்தார்
கௌரவ சுனில் குமார கமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks