E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0238/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர, பா.உ.

    1. 238/2024

      கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் மருந்து, சத்திர சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள், ஆய்வுக் கூடப் பரிசோதனைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் எதிர்வினைப்பு எக்ஸ்-கதிர் போன்ற கதிரியக்க பரிசோதனைகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்களின் தட்டுப்பாடு நிலவுவதை அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் உபகரணங்களில் தற்போது கையிருப்பில் உள்ள மருந்துகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் தட்டுப்பாடு காணப்படுகின்ற மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றிய அறிக்கையொன்று உள்ளதா என்பதையும்;

      (iii) 2025 ஆம் ஆண்டின் இறுதி வரையில் மேற்படி மருந்துகள் மற்றும் உபகரணங்களை தொடர்ச்சியாக வழங்க வகுத்துள்ள திட்டங்கள் யாவையென்பதையும்;

      (iv) யாதேனும் மருந்து அல்லது உபகரண தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதையும்;

      (v) மேற்குறிப்பிட்ட மருந்து அல்லது உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கும் அவை கையிருப்பிலின்மையால் ஏற்படக்கூடிய இடர்வரு நிலையை தவிர்ப்பதற்கும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-07

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks