E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0303/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 303/2024

      கௌரவ ரவி கருணாநாயக்க,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தற்போதைய கம்பனிகள் பதிவாளரின் பெயரையும்;

      (ii) 2015 முதல் 2024 வரையில் கம்பனிகள் பதிவாளர் பதவியினை வகித்தவர்களின் பெயர்களையும்;

      (iii) இற்றைவரையில் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட கம்பனிகளின் மொத்த எண்ணிக்கையினையும்;

      (iv) 2010, 2015, 2020, 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகள் ஒவ்வொன்றிலும், மேலும் 2025 ஆம் ஆண்டில் இற்றைவரையில் ஒருங்கிணைக்கப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கையினை வெவ்வேறாகவும்;

      (v) ஒரு கம்பனியினை ஒருங்கிணைப்பதற்கு எடுக்கும் சராசரி காலத்தினையும்;

      (vi) மேலே (iii) இற்கு அமைவாக கம்பனிகளின் ஒருங்கிணைப்பு மூலம் திணைக்களத்தினால் ஈட்டப்பட்ட மொத்த வருமானத்தினையும்;

      (vii) மேலே (iii) இற்கு அமைவாக தற்போது இயங்கும் செயல்முனைப்பான கம்பனிகளின் எண்ணிக்கையினையும்;

      (viii) கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் முழுவதும் தன்னியக்கமாக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறியத் தருவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-28

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks