E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0304/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 304/2024

      கௌரவ ரவி கருணாநாயக்க,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை இலங்கைத் துறைமுக அதிகாரசபை மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான ஒவ்வொரு முனையத்திற்கும் வந்தடைந்த கப்பல்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அதே காலப்பகுதியில் அந்த முனையங்கள் ஒவ்வொன்றினாலும் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) அதே காலப்பகுதிக்கான அத்தகைய முனையங்கள் ஒவ்வொன்றினதும் தொழிற்பாட்டு இலாபம் எவ்வளவு என்பதையும்;

      (iv) அதே காலப்பகுதியில் அதிகாரசபையால் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் இலாபம் எவ்வளவு என்பதையும்;

      (v) மேலே இல. (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு முனையங்களின் வினைத்திறன், அத்தகைய ஒவ்வொரு முனையங்களாலும் ஒரு மணி நேரத்திற்குக் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கையின் மூலம் எவ்வளவு என்பதையும்;

      வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை இலங்கையில் கையாளப்பட்ட கொள்கலன்கள் மற்றும் பொதுச் சரக்குகளின் மொத்த எண்ணிக்கை (தொன்களில்) யாதென்பதையும்;

      (ii) அடுத்த பத்து ஆண்டுகளில் கையாள்வதற்கு எதிர்பார்க்கப்படும் கொள்கலன்கள் மற்றும் பொதுச் சரக்குகளின் எண்ணிக்கை (தொன்களில்) யாதென்பதையும்;

      (iii) கடந்த 5 ஆண்டுகளில் கொள்கலன் கையாளுதலில் இலங்கையின் உலகத் தரவரிசை யாதென்பதையும்;

      வெவ்வேறாக அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-07

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks