E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0323/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, பா.உ.

    1. 323/2024

      கௌரவ (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கைப் பொலிஸில், பொலிஸ் குதிரைப்படைப் பிரிவொன்று உள்ளதா;

      (ii) ஆமெனில், தற்பொழுது அப்பிரிவிலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை எத்தனை;

      (iii) மேற்படி எண்ணிக்கையானது வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் வெவ்வேறாக யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) பொலிஸ் குதிரைப்படைப் பிரிவிற்கு 15 இனவிருத்திக்குரிய ஆண் குதிரைகளை இறக்குமதி செய்வதற்காக LA/SJ/300/2024 என்ற இலக்கத்தின் கீழ் விலைமனு கோரப்பட்டுள்ளதா;

      (ii) ஆமெனில், அதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விலைமனுக்களின் எண்ணிக்கை எத்தனை;

      (iii) மேற்குறித்த குதிரைகளை இறக்குமதி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட வழங்குநர் யார்;

      (iv) மேற்குறிப்பிடப்பட்ட விலைமனுவிற்கமைய மேற்குறித்த 15 குதிரைகளை இறக்குமதி செய்வதற்காக செலவு செய்யப்படும் பணத்தொகை எவ்வளவு;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-22

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks