பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
417/2025
கௌரவ அருண பனாகொட,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு, மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஹோமாகம, மத்தேகொட வீடமைப்புக் கட்டிடத் தொகுதியின் மலக்கழிவு அகற்றும் முறைமை பல வருடங்களாக செயலிழந்துள்ளது என்பதையும்;
(ii) தற்போது மேற்படி மலக்கழிவு அகற்றும் முறைமையைச் சுற்றி தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வேலியொன்றை நிர்மாணித்து வருகின்றது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வேலியை நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;
(ii) அதன் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்த திகதி மற்றும் நிறைவு செய்ய வேண்டிய திகதி என்பன வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) அதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்த நிறுவனம் யாதென்பதையும்;
(iv) மேற்படி ஒப்பந்த நிறுவனத்தை தெரிவு செய்யும்போது, உரிய கேள்விப்பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) மேற்படி வேலியை நிர்மாணிப்பதால் பொதுமக்கள் சுமார் 40 வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்ற வீதிக்கு அது முழுமையாக இடையூராக உள்ளதை அறிவாரா என்பதையும்;
(vi) ஆமெனில், மேற்படி நிலைமையைச் சீர்செய்வதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-02-21
கேட்டவர்
கௌரவ அருண பனாகொட, பா.உ.
அமைச்சு
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks