பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
423/2025
கௌரவ டி.கே. ஜயசுந்தர,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் தேயிலைக் கைத்தொழிற் துறை 2010ஆம் ஆண்டு தொடக்கம் வீழ்ச்சியடைந்து வருகின்றது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) தேயிலை மீள் செய்கைக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட 'ஸ்டார்' கருத்திட்டத்திற்கு நிதி வழங்கிய நிறுவனம் யாதென்பதையும்;
(iii) வழங்கப்பட்ட மொத்தப் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) அது கடனாகவா, இன்றேல், நன்கொடையாகவா வழங்கப்பட்டது என்பதையும்;
(v) கடனாக இருப்பின், வருடாந்த வட்டி வீதம் யாதென்பதையும்;
(vi) மேற்படி கடன் தொகையைச் செலுத்தி முடிக்கும் வருடம் யாதென்பதையும்;
அவர் தொிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி கருத்திட்டத்தின் நிருவாகக் கட்டமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆட்கள் யாவர் என்பதையும்;
(ii) அதனூடாக தேயிலை மீள் செய்கை மேற்கொண்டுள்ள காணியின் அளவு, ஒவ்வொரு தேயிலைப் பரிசோதகர் பிரிவுக்கமைவாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) கருத்திட்டத்தின் கீழ், தேயிலை மீள் செய்கை மேற்கொள்ளும் ஒரு ஏக்கர் காணிக்குச் செலுத்தப்பட்ட பணத்தொகை மற்றும் நிருவாகச் செலவு களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் தொிவிப்பாரா?
(இ) (i) இன்றளவில் மேற்படி கருத்திட்டத்தை நிறைவு செய்திருப்பின், அதனை நிறைவு செய்த திகதி யாதென்பதையும்;
(ii) செய்கையாளர்களுக்கு நிலுவைப் பணம் செலுத்த வேண்டியிருப்பின், அது ஒவ்வொரு தேயிலைப் பரிசோதகர் பிரிவுக்கமைவாக வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி கருத்திட்டத்தின் கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா என்பதையும்;
அவர் மேலும் தொிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-02-22
கேட்டவர்
கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks