E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0485/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ லக்ஸ்மன் நிபுண ஆரச்சி, பா.உ.

    1. 485/2025

      கௌரவ லக்ஸ்மன் நிபுண ஆரச்சி,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தொன் சைமன் விஜேவிக்ரம சமரகோன் அவர்களுக்கு சொந்தமான சுமார் 76 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கஹபொல, 'ரெஜிடேல்வத்த' என்ற காணி பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் கீழ் இருந்ததென்பதையும்;

      (ii) மேற்படி காணியின் ஒரு பகுதியில் சாக்கிய இராசதானியின் மாதிரி அமைப்பொன்று அப்போதைய பிரதமரின் ஆலோசனையின் பேரில் நிர்மாணிக்கப்பட்டு 2017.05.11 ஆம் திகதி அப்போதைய சனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது என்பதையும்;

      (iii) "உலகம் முழுவதிலுமுள்ள பௌத்த மக்களுக்கான ஒப்பற்ற பரிசு" என அதற்குரிய நினைவுப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி நிர்மாணத்திற்காக செலவிடப்பட்ட மொத்த பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

      (ii) மேற்படி நிர்மாணப் பணியின் தற்போதைய நிலை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-04

கேட்டவர்

கௌரவ லக்ஸ்மன் நிபுண ஆரச்சி, பா.உ.

அமைச்சு

புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks