E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0492/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தேவானந்த சுரவீர, பா.உ.

    1. 492/2025

      கௌரவ தேவாநந்த சுரவீர,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையிலுள்ள பதிவுசெய்யப்பட்ட மருந்தகங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மருந்தாளர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (ii) 2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தின்படி, பதிவுசெய்யப்பட்ட மருந்தாளர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட மருந்தகங்கள் கொண்டு நடத்தப்பட வேண்டுமா என்பதையும்;

      (iii) பதிவுசெய்யப்பட்ட மருந்தகங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், பதிவுசெய்யப்பட்ட மருந்தாளர்களின் பற்றாக்குறை காணப்படுவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iv) ஆமெனில், அந்தப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்காக இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) வெளிவாரி மருந்தாளர் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக மருத்துவ சபையில் பதிவுசெய்வதற்கு க.பொ.த (உ/த) பரீட்சையில் இரசாயனவியல் பாடத்தில் திறமைச் சித்தியைப் பெற்றிருக்க வேண்டியதை அறிவாரா என்பதையும்;

      (ii) இறுதியாக நடாத்தப்பட்ட வெளிவாரி மருந்தாளர் பரீட்சைக்கு தோற்றிய சுமார் 1700 விண்ணப்பதாரர்களில் 99 விண்ணப்பதாரர்கள் மாத்திரமே சித்தியடைந்துள்ளனர் என்பதோடு அவ்வெண்ணிக்கையானது பரீட்சைக்குத் தோற்றிய மொத்த விண்ணப்பதாரர்களில் வெறுமனே 6% இலும் குறைவான விகிதமாக உள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-07

கேட்டவர்

கௌரவ தேவானந்த சுரவீர, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks