E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0502/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நந்த பண்டார, பா.உ.

    1. 502/2025

      கௌரவ நந்த பண்டார,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் சம்பள முரண்பாடு காணப்படுவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) அதனைத் தீர்ப்பதற்குள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;

      (iii) ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பின் பிரகாரம், பதவி உயர்வுகளுக்கு மொடியுல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதை அறிவாரா என்பதையும்;

      (iv) மொடியுல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாததால், பதவி உயர்வுகள் இழக்கப்படுதல், சம்பள ஏற்றங்கள் கிடைக்காமை மற்றும் சேவையை நிரந்தரமாக்குவதில் தாமதம் போன்ற பிரச்சனைகள் எழுந்துள்ளமையை அறிவாரா என்பதையும்;

      (v) மேற்படி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;

      (vi) அவற்றைத் தீர்ப்பதற்கான கால வரையறை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) சேவை பிரமாணக் குறிப்பின் பிரகாரம், மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இரண்டு கால வரையறைக்குள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக மூப்புரிமை தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளமையை அறிவாரா என்பதையும்;

      (ii) மேற்படி பிரச்சனைகளை தீர்ப்பதில் தடைகள் உள்ளதா என்பதையும்;

      (iii) அந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்குள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) இலங்கை கல்வி நிர்வாகச் சேவை அலுவலர்களை பணியில் அமர்த்தும் நடவடிக்கை முறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) இன்றேல், அது தொடர்பாக காணப்படும் வேலைத்திட்டம் யாதென்பதையும்;

      அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-18

கேட்டவர்

கௌரவ நந்த பண்டார, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks