E   |   සි   |  

 திகதி: 2025-07-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0717/ 2025 - கௌரவ தனுஷ்க ரங்கனாத், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 717/2025
      கௌரவ தனுஷ்க ரங்கனாத்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இயற்கை நீரோடைகளைப் பாதுகாக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      (ii) இயற்கை நீரோடைகளை அண்டியதாக இருக்க வேண்டிய நீரோடை ஒதுக்கத்திற்குரிய நிலப்பிரதேசத்தின் அளவு எவ்வளவு என்பதையும்;
      (iii) நீரோடை ஒதுக்கங்களை பலாத்காரமாக கையகப்படுத்தியுள்ள நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
      (iv) ஆமெனில், அது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) நீரோடை ஒதுக்கங்கள் அறுதி உறுதிக் காணிகளாக வழங்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
      (ii) அவ்வாறு களுத்துறை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நீரோடை ஒதுக்கக் காணிகளின் அளவு எவ்வளவு என்பதையும்;
      (iii) மேற்படி நீரோடை ஒதுக்கக் காணிகளை மீண்டும் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-07-24

கேட்டவர்

கௌரவ தனுஷ்க ரங்கனாத், பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks