பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1071/2025
கௌரவ (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை மாவட்டத்தின் கம்புறுபிட்டிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்குச் சொந்தமான 'ரட்டலங்காவ' எனும் பெயரையுடைய காணியின் பரப்பளவு எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி காணியிலிருந்து ஒவ்வொரு நிறுவனத்திற்கும் கையுதிர்க்கப்பட்டுள்ள காணியின் அளவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்கூறப்பட்ட காணியிலிருந்து லங்கா கைத்தொழில் அபிவிருத்திச் சபைக்கு ஒதுக்கப்பட்ட காணியின் அளவு எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்கூறப்பட்ட காணியில், காணித் துண்டுகளை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பணியாளர்களுக்கு வழங்குவதற்கான முறையான அங்கீகாரம் உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி அங்கீகாரத்துடன் தொடர்புடைய கடிதத்தின் பிரதியொன்றை சபையில் சமர்ப்பிக்க முடியுமா என்பதையும்;
(iii) இன்றேல், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்குச் சொந்தமான மற்றொரு காணிக்குப் பெறப்பட்ட அங்கீகாரத்தைப் பயன்படுத்தி, மேற்கூறப்பட்ட காணியின் சில பகுதிகளை மோசடியாகவும் சட்டவிரோதமாகவும் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததா என்பதையும்;
(iv) மேற்கூறப்பட்ட காணியில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக வசித்து வரும் குடும்பங்கள் தொடர்பாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-23
கேட்டவர்
கௌரவ (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks