பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1119/2025
கௌரவ லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இராணுவம் சார்ந்த ஆட்சேர்ப்புகள் என்ற வகைப்படுத்தலின் கீழ் தொழில்சார் கடமைகளுக்காக, இன்றளவில் முப்படைகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் இராணுவப் பிரிவுக்கமைய வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) இவர்கள் ஆட்சோ்ப்புச் செய்யப்பட்டுள்ள தொழில்கள் யாவை என்பதையும்;
(iii) அத்தகைய வகைப்படுத்தலின் கீழ் இவர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iv) கடமைகளில் ஈடுபடுத்தப்படும்போது, மேற்படி வகைப்படுத்தலின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள இராணுவ அங்கத்தவர்களுக்கும் ஏனைய இராணுவ அங்கத்தவர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளனவா என்பதையும்;
(v) ஆமெனில், அவை யாவை என்பதையும்;
(vi) ஏனைய இராணுவ அங்கத்தவர்களுக்கு உள்ளதுபோன்ற பதவிகளும் பதவி உயர்வுகளும், மேற்படி வகைப்படுத்தலின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்படுகின்ற இராணுவ அங்கத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) முப்படை மறுசீரமைக்கப்படுமாயின், மேற்படி வகைப்படுத்தலின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள இராணுவ அங்கத்தவர்கள் நீக்கப்படுவார்களா என்பதையும்;
(ii) அது சம்பந்தமான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அந்த எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) முப்படை மறுசீரமைக்கப்படும்போது நீக்கப்படுகின்ற, நீக்கப்படவுள்ள மற்றும் ஓய்வெடுக்கச் செய்யப்படுகின்ற இராணுவ அங்கத்தவர்கள் சம்பந்தமான வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) ஆமெனில், அந்த வேலைத்திட்டம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-24
கேட்டவர்
கௌரவ லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks