பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1123/2025
கௌரவ ரவீந்திர பண்டார,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பதவியை கைவிட்டுச் சென்றுள்ள இலங்கை விமானப் படையைச் சோ்ந்த வீரர்கள்/அதிகாரிகளின் எண்ணிக்கை யாது;
(ii) அவர்களில் இலங்கை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் சரணடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
(iii) அவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
(iv) அவர்களை இலங்கை விமானப் படையிலிருந்து நீக்குவதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இலங்கை விமானப் படைக்கு C-130 விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்பதை அறிவாரா;
(ii) தற்போது விமானப் படைக்கு சொந்தமாக உள்ள C-130 விமானங்களின் எண்ணிக்கை யாது;
(iii) மேற்படி விமானங்களின் பராமரிப்பு நடவடிக்கைகள் இறுதியாக எக்காலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன;
(iv) புதிய C-130 விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதன் நோக்கம் யாது;
(v) மேற்படி புதிய C-130 விமானம் ஒரு அன்பளிப்பா; இன்றேல், புதிய கொள்வனவா;
(vi) அதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள எதிர்பார்த்துள்ள பணிகள் இதுவரைக் காலம் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட முறை யாது;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-25
கேட்டவர்
கௌரவ ரவீந்திர பண்டார, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks