E   |   සි   |  

 திகதி: 2025-09-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1159/ 2025 - கௌரவ அஜித் கிஹான், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1159/2025
      கௌரவ அஜித் கிஹான்,— கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கையில் பண்ணை முறையில் இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றது என்பதையும்;
      (ii) எனினும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறால் இறக்குமதி செய்யப்பட்டு மீள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது என்பதையும்;
      (iii) இதன் காரணமாக, இலங்கையின் இறால் வளர்ப்புத் தொழில்துறைக்கும் அத்தொழில்துறையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் பாதகமான தாக்கம் ஏற்படுகிறது என்பதையும்;
      அவர் ஏற்றுக்கொள்வாரா?
      (ஆ) அவ்வாறெனில், இறாலை மீள் ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக இலங்கையில் இறால் வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-25

கேட்டவர்

கௌரவ அஜித் கிஹான், பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks