E   |   සි   |  

 திகதி: 2025-10-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

1161/ 2025 - கௌரவ துரைராசா ரவிகரன், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1161/2025
      கௌரவ துரைராசா ரவிகரன்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொது வைத்தியசாலைகளில் மருத்துவர் களுக்கான உள்ளகப் பயிற்சி அளிக்கப்படாததை அறிவாரா என்பதையும்;
      (ii) அநேகமான ஆதார வைத்தியசாலைகளில் மருத்துவப் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட நான்கிற்கும் மேற்பட்ட நிபுணத்துவ மருத்துவர்கள் பணியாற்றுகின்றபோதும், முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொது வைத்தியசாலைகளில் நிபுணத்துவ மருத்துவர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      (iii) போதிய வளங்கள் இல்லாதிருப்பதால் நோயாளர்களை பூர்வாங்க மருத்துவப் பரிசோதனைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்காக பிற மாவட்ட வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதன் காரணமாக அரசாங்க மருத்துவச் சேவையின் இயல்திறன் இன்மையும் ஏற்றத்தாழ்வும் நிரூபணமாவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
      (iv) மேற்படி வைத்தியசாலைகள் அடங்கலாக, இலங்கையிலுள்ள அனைத்து மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் போதுமான பணியாட்டொகுதி மற்றும் பௌதீக வளங்கள் இருப்பதை உறுதிசெய்வதற்காக கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்படுமா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-07

கேட்டவர்

கௌரவ துரைராசா ரவிகரன், பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks