பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1179/2025
கௌரவ சிவஞானம் சிறீதரன்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கிளிநொச்சி மாவட்டத்தில் —
(i) இயங்குகின்ற தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் தரப்படுத்தலின் அடிப்படையில் இயங்குகின்றனவா என்பதையும்;
(ii) தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களின் எண்ணிக்கை தரப்படுத்தலின் அடிப்படையில் வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(iii) நிரந்தர காணி மற்றும் கட்டிட வசதிகளோடு / வசதிகளின்றி இயங்கும் தபாலகங்கள், உப தபாலகங்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iv) மாவட்டத்தில் நிரந்தர கட்டிடங்களின்றி இயங்கும் உப தபாலகங்களுக்கு நிரந்தர கட்டிடங்கள் வழங்கப்படும் காலப்பகுதி யாதென்பதையும்;
(v) கிளிநொச்சி, பரந்தன், பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி ஆகிய தபாலகங்களில் நவீன வசதிகள் மற்றும் கணினி வசதிகள் காணப்படுகின்றனவா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) பாரதிபுரம், புன்னைநீராவி மற்றும் பள்ளிக்குடா ஆகிய பிதேசங்களில் உப தபாலகங்கள் நிறுவப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில், 2016.09.05 ஆம் திகதிய எனது கடிதத்தின் பிரகாரம் அமைச்சரின் பொது மக்கள் தொடர்பாடல் அலுவலரால் தபால்மா அதிபருக்கு அனுப்பப்பட்ட 2016.09.09 ஆம் திகதிய PPS&MR/HR/09-182 ஆம் இலக்க கடிதம் தொடர்பாக இதுவரையில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-24
கேட்டவர்
கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks