பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1210/2025
கௌரவ எம்.எஸ்.உதுமாலெப்பை,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பொத்துவில், அறுகம்பே பிரதேசத்தில் முஸ்லீம்களின் மபாஸா பள்ளிவாசலுக்கு அருகில் இஸ்ரேலுக்கு சொந்தமான சட்ட விரோத 'சபாத் இல்லம்' எனுமொரு நிறுவனம் இயங்கி வருவது குறித்து அறிவாரா;
(ii) மேற்படி நிறுவனம் எவ்வளவு காலமாக இயங்கி வருகின்றது;
(iii) மேற்படி நிறுவனம் அமைந்துள்ள காணி வழங்கப்பட்டுள்ள அடிப்படை யாது;
(iv) மேற்படி நிறுவனத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையால், இலங்கையின் சுற்றுலாக் கைத்தொழிலில் கவர்ச்சிகரமான பிரதேசமாகத் திகழும் அறுகம்பே பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளார்கள் என்பதை அறிவாரா;
(v) மேற்படி நிறுவனத்தை அகற்றுவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;
(vi) மேற்படி நிறுவனம் தொடர்பில் அமைச்சானது, பொத்துவில் பிரதேச செயலகம் மற்றும் பொத்துவில் பிரதேச சபையிடமிருந்து அறிக்கையொன்றை கோரியுள்ளதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-26
கேட்டவர்
கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை, பா.உ.
அமைச்சு
புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks