E   |   සි   |  

 திகதி: 2025-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1242/ 2025 - கௌரவ திலிண சமரகோன், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1242/2025
      கௌரவ திலிண சமரகோன்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) மக நெகும நிறுவனம் தற்போது இயங்குகின்றதா என்பதையும்;
      (ii) ஆமெனில், அந்த நிறுவனத்தில் செயற்பாட்டு நிலையிலுள்ள அலுவலகங்கள் மற்றும் கைத்தொழில் தளங்கள் யாவை என்பதையும்;
      (iii) செயற்படாதிருப்பின், மூடப்பட்டுள்ள அலுவலகங்கள் மற்றும் கைத்தொழில் தளங்கள் யாவை என்பதையும்;
      அவர் குறிப்பிடுவாரா?
      (ஆ) (i) அனுராதபுரம், கெக்கிராவ, கனேவல்பொல பிரதேசத்தில் மக நெகும வேலைத் தளமொன்று உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
      (ii) அதன் தற்போதைய நிலைமை யாதென்பதையும்;
      (iii) அதனை மூடுவதற்கான காரணம் யாதென்பதையும்;
      (iv) அங்கு காணப்படுகின்ற இயந்திர உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
      (v) அவற்றின் தற்போதைய பெறுமதி எவ்வளவு என்பதையும்;
      (vi) அவற்றை இலங்கையிலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காகப் பயன்படுத்தும் வேலைத் திட்டமொன்று உள்ளதா என்பதையும்;
      (vii) அந்த மத்திய நிலையத்தை தொடர்ந்தும் பயன்படுத்தாவிடின், அதனை கையகப்படுத்தும் அடிப்படை யாதென்பதையும்;
      (viii) அதனை கையகப்படுத்தும் நிறுவனம் யாதென்பதையும்;
      (ix) கையகப்படுத்த எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;
      (x) எக்காலப் பகுதியில் கையகப்படுத்தப்படும் என்பதையும்;
      அவர் குறிப்பிடுவாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-24

கேட்டவர்

கௌரவ திலிண சமரகோன், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks