E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1251/ 2025 - கௌரவ அஜந்த கம்மெத்தெகே, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1251/2025
      கௌரவ அஜந்த கம்மெத்தெகே,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) நீர்ப்பாசனத் திணைக்களத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள குளங்கள் மற்றும் ஆறுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
      (ii) நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் குளங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
      (iii) நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும், மாத்தறை மாவட்டத்திலுள்ள குளங்கள், ஆறுகள் மற்றும் கால்வாய்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
      (iv) மாத்தறை மற்றும் திஹகொடை பிரதேச செயலகப் பிரிவுகளில், நில்வலா ஆற்றுப்படுகைக்கு அண்டியதாக நீர்ப்பாசனத்துக்கான ஒதுக்கங்கள் காணப்படுகின்றனவா என்பதையும்;
      (v) அவற்றை வேறு தரப்பினர் கையகப்படுத்தியுள்ளமையை அறிவாரா என்பதையும்;
      (vi) ஆமெனில், அதற்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;
      அவர் குறிப்பிடுவாரா?
      (ஆ) (i) திஹகொடை பிரதேச செயலகப் பிரிவின், நாதுகல கிராம அலுவலர் பிரிவில் நில்வலா ஆற்றுத் திட்டத்திற்கு சுவீகரிக்கப்பட்டுள்ள காணியின் அளவு யாதென்பதையும்;
      (ii) அதற்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (iii) இழப்பீடுகளை பெற்றுக்கொண்ட ஆட்கள் மேற்படி காணிகளை வேறு தரப்பினருக்கு விற்றுள்ளமையை அறிவாரா என்பதையும்;
      (iv) நில்வலா ஆறு சார்ந்த கருத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;
      (v) இன்றேல், சுவீகரிக்கப்பட்ட காணிகள் மீண்டும் அதன் ஆரம்ப உரிமையாளர்களுக்கு வழங்கப்படுமா என்பதையும்;
      அவர் குறிப்பிடுவாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-07

கேட்டவர்

கௌரவ அஜந்த கம்மெத்தெகே, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks