பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2025-10-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

1258/ 2025 - கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1258/2025
      கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கை சிறைச்சாலைகளில் இன்றளவில் எத்தனை சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;
      (ii) மேற்படி சிறைக்கைதிகளுள் 20 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்படவுள்ள சிறைக்கைதிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
      (iii) 20 ஆண்டுகால சிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர் அச்சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்களா என்பதையும்;
      (iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) மேற்படி சிறைக்கைதிகளைத் தவிர அபராதம் செலுத்த முடியாமல் நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
      (ii) அவர்களின் விடயத்தில் நியாயமான மற்றும் முறையான வழிமுறையொன்று பின்பற்றப்படுமா என்பதையும்;
      (iii) ஆமெனில், அவ்வழிமுறை யாதென்பதையும்;
      (iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
      மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-08

கேட்டவர்

கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks