பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1270/2025
கௌரவ சுஜீவ திசாநாயக்க,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் மூன்று பிரதான ஏற்றுமதிப் பயிர் வகைகள் யாவை என்பதையும்;
(ii) பிரதான ஏற்றுமதிப் பயிராக தென்னை அறிவிக்கப்பட்ட ஆண்டு யாதென்பதையும்;
(iii) இலங்கையில் காணப்படுகின்ற தென்னை மரங்களின் எண்ணிக்கை மற்றும் தெங்கு பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பு ஹெக்டயார்களில் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iv) இலங்கையில் தேங்காய் விளைச்சலை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?
(ஆ) (i) தெங்கு சார்ந்து இலங்கையில் இன்றளவில் நடைமுறையிலுள்ள கைத்தொழில்கள் யாவை என்பதையும்;
(ii) தெங்கு சார்ந்த உற்பத்திகள் மூலம் இலங்கைக்குக் கிடைக்கும் வருடாந்த வெளிநாட்டுச் செலாவணி அளவு எவ்வளவு என்பதையும்;
(iii) தேங்காய் மட்டை சார்ந்து இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கைத்தொழில்களின் எண்ணிக்கை, அவற்றின் பிரதான ஏற்றுமதி உற்பத்திகள் மற்றும் உருவாக்கப்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) தேங்காய் மட்டைக் கைத்தொழில் சார்ந்து எழுந்துள்ள முக்கியமான பிரச்சனைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-26
கேட்டவர்
கௌரவ சுஜீவ திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks