பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1272/2025
கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இன்றளவில் தாபிக்கப்பட்டுள்ள போதனா வைத்தியசாலைகளின் எண்ணிக்கை யாது;
(ii) இவை தாபிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவை;
(iii) போதனா வைத்தியசாலையொன்றை நிர்மாணிப்பதன் நோக்கங்கள் யாவை;
(iv) அவ் வைத்தியசாலையொன்றில் காணப்பட வேண்டிய முதன்மை வசதிகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) சகல போதனா வைத்தியசாலைகளுக்கும் மருத்துவ பீடமொன்று இணைக்கப்பட்டுள்ளதா;
(ii) அவ் ஒவ்வொரு போதனா வைத்தியசாலையிலும் பேராசிரியர் பிரிவொன்று தாபிக்கப்பட்டுள்ளதா;
(iii) பேராசிரியர் பிரிவொன்று தாபிக்கப்பட்டுள்ள மற்றும் தாபிக்கப்படாதுள்ள போதனா வைத்தியசாலைகள் வெவ்வேறாக யாவை;
(iv) மேற்படி வைத்தியசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவ பீடங்கள் வெவ்வேறாக யாவை;
(v) குளியாப்பிட்டிய வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுகையில், வயம்ப பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் பிணியாய்வு பயிற்சிக்காக பேராசிரியர் பிரிவொன்றை தாபிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்ததா;
(vi) ஆமெனில், குறிப்பிட்ட பிரிவு எதிர்காலத்தில் தாபிக்கப்படுமா;
(vii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை;
(viii) குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-09
கேட்டவர்
கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார, பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks