E   |   සි   |  

 திகதி: 2025-10-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1307/ 2025 - கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1307/2025
      கௌரவ ரீ.கே. ஜயசுந்தர,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) பச்சைத் தேயிலைக் கொழுந்து உற்பத்தி குறைந்துள்ளமை தேயிலைக் கைத்தொழில் சார்ந்த பிரதானமானதொரு பிரச்சனை என்பதையும்;
      (ii) நீண்ட காலமாக தேயிலைச் செய்கை மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் தேயிலைக் காணிகளின் மண் வளமற்றுப் போயுள்ளமை மற்றும் மண்ணில் அமிலத்தன்மை அதிகரித்துள்ளமை இதற்கு தாக்கம் செலுத்தியுள்ளதென்பதையும்;
      (iii) மூங்கிலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்ற உயிர் கரியை (Bio Charcoal) பயன்படுத்துவதன் மூலம் தேயிலைக் காணிகளை நீண்ட காலத்துக்கு வளப்படுத்த முடியுமென தேயிலை ஆராய்ச்சி நிறுவகம் மற்றும் பல்கலைக்கழகங்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென்பதையும்;
      (iv) பயன்படுத்தும் உரத்தின் அளவுக்கு நிகராக உயிர் கரி பயன்பாட்டின் மூலம், அகத்துறிஞ்சக்கூடிய உரத்தின் அளவில் துரித வளர்ச்சி ஏற்படுவதால் தேவையற்ற முறையில் உரம் இடுவதை கட்டுப்படுத்த முடியுமென்பதையும்;
      அவர் ஏற்றுக்கொள்கின்றாரா?
      (ஆ) (i) ஆமெனில், அது தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை யாதென்பதையும்;
      (ii) இந்த விடயம் தொடர்பாக தேயிலைக் கைத்தொழில் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்களை இணைத்துக்கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-09

கேட்டவர்

கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks